உயர்நீதித்துறை அரசாங்கத்திற்கு சார்பாக செயற்படுகின்றதா...! விக்னேஸ்வரன் கேள்வி

Sri Lanka Politician Sri Lanka Government C. V. Vigneswaran Ministry of justice Sri lanka
By Sajithra May 16, 2024 08:45 AM GMT
Report

இலங்கையின் உயர் நீதித்துறை அரசாங்கத்திற்கு சார்பான நிலையில் இயங்குகின்றதோ என சந்தேகம் எழுந்துள்ளதாக  நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் (C. V. Vigneswaran) தெரிவித்துள்ளார்.

அகில இந்திய வழக்கறிஞர் கூட்டமைப்பின் சர்வதேச கருத்தரங்கத்திற்கான பிரதம அதிதி உரையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், 

"இலங்கையில் நாடு சுதந்திரம் அடைந்த உடனேயே பிரதம நீதியரசர் விடயத்தில் ஒரு தவறிழைக்கப்பட்டது.

முள்ளிவாய்க்காய்காலில் சர்வதேச ஊடகங்களின் கண்காணிப்பு

முள்ளிவாய்க்காய்காலில் சர்வதேச ஊடகங்களின் கண்காணிப்பு

பிரதம நீதியரசர் நியமனம் 

முன்பு, சிரேஷ்ட நீதியரசராக உச்ச நீதிமன்றத்தில் நீதியரசர் நாகலிங்கம் இருந்தார். அவர் அப்போதைய ஆளுநர் நாயகம் விடுமுறையில் சென்ற போது அவர் சார்பில் பதில் ஆளுநர் நாயகமாக (Governor General) பதவி ஏற்றவர்.

c-v-vigneswaran-speech-

இந்நிலையில், நீதியரசர் நாகலிங்கத்திற்கு வழங்கப்பட வேண்டிய பிரதம நீதியரசர் பதவி அப்போது சட்டத்துறைத் தலைமையதிபதியாக (Attorney General) இருந்த எச்.எச்.பஸ்நாயக என்பவருக்கு வழங்கப்பட்டது.

அன்றிலிருந்து சட்டத்துறைத் தலைமையதிபதிகளை பிரதம நீதியரசராக நியமிப்பதும் அந்த திணைக்களத்தில் உயர் பதவிகளில் உள்ளோரை மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் போன்றவற்றிற்கு நியமிப்பதும் ஒரு வழக்கமாக ஆகிவிட்டது.

பயணிகளின் உயிரை காப்பாற்றி விட்டு உயிரிழந்த சாரதி - இலங்கையில் நடந்த துயர சம்பவம்

பயணிகளின் உயிரை காப்பாற்றி விட்டு உயிரிழந்த சாரதி - இலங்கையில் நடந்த துயர சம்பவம்

சட்டத்துறை 

அதேவேளை, நீதியரசர் துரைராஜாவும் குறித்த திணைக்களத்தில் இருந்தே சிரேஷ்ட நீதிமன்றங்களுக்கு நியமனம் பெற்றவர்.

c-v-vigneswaran-speech-

அந்தத் திணைக்களத்தில் வேலை செய்பவர்கள் கடின உழைப்பாளர்கள். அவர்களின் தரத்தைப் பற்றி நான் எதுவும் கூறவில்லை. என் மகன் அந்த திணைக்களத்திலேயே உயர் பதவியில் இருக்கின்றார்.

ஆனால், தமது தொழில் வாழ்க்கை பூராகவும் அரசாங்கம் சார்பில் வழக்குகள் பேசிக் கொண்டிருந்த இவர்களை திடீரென்று மக்கள் சார்பில் நீதிபதிகளாக நியமிப்பது அரசாங்கத்திற்கு சார்பான தீர்ப்புக்களை அவர்களிடம் இருந்து கொண்டு வராதா என்ற கேள்வி எழுகின்றது.

பலர் அந்தக் காலத்தில் பேசிக் கொண்டது என்னவென்றால் நீதியரசர் நாகலிங்கத்தை விடுத்து சட்டத்துறைத் தலைமை அதிபதியை பிரதம நீதியரசர் பதவிக்கு அப்போது நியமித்தமை ஒரு பௌத்த பெரும்பான்மையினத்தவரை அப் பதவியில் இருத்த வேண்டும் என்ற அரசியல் காரணத்தினாலேயே என்பதாகும். 

பொது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

பொது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

நீதித்துறை பதவிகள்  

அது மாத்திரமன்றி, என் காலத்திலும் இது தான் நடந்தது. எனக்கு ஐந்து வருடங்கள் கனிஷ்டரான சட்டத்துறைத் தலைமையதிபதியான பெரும்பான்மை பௌத்தர் ஒருவர் வெற்றிடம் வந்த போது நேரடியாக நியமனம் பெற்றார்.

c-v-vigneswaran-speech-

இருப்பினும், நீதித்துறையில் சட்டத் துறைத் திணைக்கள வழக்கறிஞர்களையோ தனியார் வழக்கறிஞர்களையோ ஒரு குறிப்பிட்ட கால தேர்ச்சியின் பின்னர் நீதிபதிகளாக்குவதே உசிதம் என்று எனக்குப்படுகின்றது.

இவ்வாறிருக்கையில், இன்று இலங்கையின் உயர் நீதித்துறை அரசாங்கத்திற்கு சார்பான நிலையில் இயங்குகின்றதோ என்று சிந்திக்க வேண்டியுள்ளது.

அதற்காக நீதித்துறை அரசாங்கத்திற்கு எதிராக செயற்பட வேண்டும் என்று நான் கூறவரவில்லை. அரசாங்கத்துக்காக உழைத்தவர்களை நேரடியாக நீதித்துறைக்குள் உள்நுழைப்பது எவ்விதமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதையே வெளிக் கொண்டு வருகின்றேன் ” என தெரிவித்துள்ளார். 

கல்முனையில் அஷ்ரப் ஞாபகார்த்த அருங்காட்சியக நிர்மாணப் பணிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை

கல்முனையில் அஷ்ரப் ஞாபகார்த்த அருங்காட்சியக நிர்மாணப் பணிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW  
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, யோகபுரம்

25 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு

25 Jun, 1996
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Stouffville, Canada

24 Jan, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US