முள்ளிவாய்க்காய்காலில் சர்வதேச ஊடகங்களின் கண்காணிப்பு
முள்ளிவாய்க்கால் நினைவு நாட்களில் நடாத்தப்படும் முள்ளிவாய்க்கால் (Mullivaikkal) கஞ்சி வழங்கும் நிகழ்வுகளை கண்காணிக்கும் நடவடிக்கையில் சர்வதேச ஊடகங்கள் ஈடுபட்டுள்ளன.
இக்கண்காணிப்பு நடவடிக்கையானது, இன்றையதினம் (16.05.2024) முல்லைத்தீவு (Mullaitivu) - முள்ளிவாய்க்கால் கட்டடப்பகுதிக்கு அருகில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மே மாதம் 18ஆம் திகதி பொதுமக்கள் அழிப்பு தினமாக தமிழ் மக்கள் அனைவரும் பல கெடுபிடிகளுக்கு மத்தியில், இறந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தி வருவது வழக்கமான செயற்பாடாக மாறியுள்ளது.
முள்ளிவாய்க்கால் கஞ்சி
இதற்கமைய, மே மாத ஆரம்பத்திலிருந்து மக்கள் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், இந்நிகழ்வுகளை இம்முறை சர்வதேச ஊடகங்கள் நேரடியாக கண்காணித்து வருகின்றன.
இதனடிப்படையில், முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு பொதுச்சந்தை கட்டடப்குபதிக்கு அருகில் இன்று முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி வழங்க ஆயத்த வேலைகள் இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில், குறித்த வேலைகள், முள்ளிவாய்க்கால் முக்கிய
நினைவிடங்கள் மற்றும் தடய பொருட்கள் ஆகியவற்றை சர்வதேச ஊடகத்தினர் நேரடியாக
கண்காணித்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |