கஜேந்திரகுமார் - சீ.வீ.கே.சிவஞானம் திடீர் சந்திப்பு
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சீ.வீ.கே.சிவஞானத்திற்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கும் இடையில் திடீர் சந்திப்பொன்று யாழில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பு, நேற்றையதினம்(25.01.2025) யாழ் நல்லூரில் உள்ள சிவஞானத்தின் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.
முன்னதாக, புதிய அரசியலமைப்பு தொடர்பான தமிழ்க் கட்சிகளின் கலந்துரையாடலொன்றுக்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அழைப்பு விடுத்திருந்தார்.
சந்திப்பின் பின்னணி
இதனையடுத்து, அவ்வாறான அழைப்பு எதுவும் இலங்கை தமிழரசுக் கட்சிக்கு உரிய முறையில் வரவில்லை எனவும் அவ்வாறு அழைப்பு வந்தால் அதனை பரிசீலிக்க தயார் என்றும் சி.வி.கே.சிவஞானம் அண்மையில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையிலயே, இருவருக்குமிடையில் சந்திப்பு இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரனும் பங்குபற்றியிருந்தார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நான் குட்டை உடை அணிந்த புகைப்படம் வெளியானதும் அவ்ளோ பிரச்சனை... சீரியல் நடிகை பரீனா ஆசாத் Cineulagam
எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரியாக நடிக்கும் நடிகை ஸ்ரீஜா தனது கணவருடன் எடுத்த அழகிய போட்டோஸ் Cineulagam
முதல்வர் விஜய் கரூர் செல்லும் விவகாரம் - நீதிபதி சரமாரி கேள்வி, வழக்கை திரும்ப பெற்ற திமுக News Lankasri