இந்திய மயக்க மருந்தினால் ஏற்பட்ட சிக்கல்! சிசேரியன் சிகிச்சையின் பின்னர் உயிரிழந்த பெண்- விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட இந்திய மயக்க மருந்தினால் ஏற்பட்ட பிரச்சினையால் பேராதெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் பலருக்கு அந்த மருந்தினால் ஒவ்வாமை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
நீதிமன்ற உத்தரவால், இந்திய மயக்க மருந்து பயன்பாட்டிலிருந்து விலக்கி வைக்கப்பட்டு, அதற்குப் பதிலாக மியன்மார் அரசிடம் இருந்து அரசு வைத்தியசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள மருந்து குறித்தும் சந்தேகம் எழுந்துள்ளது.

மருந்துகளை ஆய்வக ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்
எனவே உடனடியாக மருந்துகளை ஆய்வக ஆய்வுக்கு உட்படுத்துமாறு சுகாதார அமைச்சகத்திடம் ஆய்வக அறிவியல் தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
இந்திய அரசிடமிருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட மயக்க மருந்துகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், மியன்மார் அரசாங்கத்திடம் இருந்து பெறப்பட்ட மருந்துகள் விநியோகிக்கப்பட்ட போதிலும், அது தொடர்பில் இரசாயன பரிசோதனை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

சிசேரியன் சிகிச்சையின் பின்னர் உயிரிழந்த பெண்
அந்த மருந்துகள் இலங்கையின் தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவு செய்யப்படவில்லை, மியன்மார் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட மருந்துகள் என்றாலும், அவை பங்களாதேஷில் தயாரிக்கப்பட்டவை என்றும், இந்த மருந்துகள் மியன்மாரிலும் பதிவு செய்யப்படவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
இரசாயனப் பரிசோதனையின்றி வழங்கப்பட்ட இந்திய மயக்க மருந்தின் சிக்கலால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இரசாயனப் பரிசோதனையின்றி எந்த அடிப்படையில் இதேபோன்ற மருந்தைப் பயன்படுத்துவது என அரசாங்கத்திடம் தொழிற்சங்கங்கள் கேள்வி எழுப்பியுள்ளன.
எனவே இது தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு சுகாதார அமைச்சரிடம் தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
19 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri