இந்த அரசாங்கத்தை மக்கள் வீட்டுக்கு அனுப்புவார்கள்
இந்த அரசாங்கத்தை மக்கள் வீட்டுக்கு அனுப்புவார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 2026ம் ஆண்டு மே மாதம் 24ம் திகதிக்கு முன்னதாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு வாக்களித்த மக்களே அவர்களை வீட்டுக்கு அனுப்புவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தாம் கூறிய பல எதிர்வுகூறல்கள் பலித்துள்ளதாகவும் இந்த அரசாங்கம் விரைவில் வீட்டுக்கு போகும் என்ற எதிர்வுகூறலும் நிச்சயம் பலிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த அரசாங்கம் முன்னோக்கிச் செல்லக்கூடிய அரசாங்கமாக தென்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அனுபவம் அற்ற இந்த அரசாங்கம் எவ்வித திட்டங்களும் இன்றி செயற்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த அரசாங்கத்தினால் ஆட்சி செய்ய முடியவில்லை என நாம் கூறவில்லை எனவும், அரச அதிகாரிகள், மருத்துவர்கள், பொறியியலாளர்கள் மற்றும் புத்திஜீவிகள் கூறுகின்றார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
பாதாள உலகக் குழுக்களுடன் அரசியல்வாதிகளுக்கு தொடர்பு இருந்தால் அவர்கள் பற்றிய விபரங்களை அரசாங்கம் வெளியிட வேண்டுமென நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
