மனநலம் குன்றியவர்களின் ஆலோசனை! - 2022 ஆம் ஆண்டு அரசாங்கம் வெடித்து சிதறும் (Video)
எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தின் படி தற்போதைய அரசாங்கம் வெடித்து சிதறும் என்பதே உண்மை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளீன் பண்டார (Nalin Bandara) தெரிவித்துள்ளார்.
நுவரெலியா வலப்பனையில் நேற்று விவசாயிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அளவில் நாடு அதளபாதாளத்திற்குள் விழும் நிலை உள்ளதாகவும், அவ்வாறான ஒரு நிலைமை ஏற்படுமானால் அதற்கு தற்போதைய அரசாங்கம் முழு பொறுப்பையும் ஏற்க வேண்டும் எனவும் இதன்போது எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் தெரிவித்ததாவது,
“சரியான விவசாய ஆலோசனைகளை வழங்க முடியாதவர்களே ஜனாதிபதியுடன் உள்ளனர். சேதன பசளை பாவனைக்கு நாம் எதிரானவர்கள் அல்ல. ஆனால் இது நடைமுறைப்படுத்தப்பட்ட முறையே தவறானது என்கிறோம்.
தற்போது அவர்கள் இது தொடர்பில் பிறப்பித்த வர்த்தமானி முன்பு போல் மீள பெறபட்டுள்ளது. எனினும் பெரும்போகச் செய்கை தற்போதைய நிலையில் பாதிக்கப்பட்டுள்ளது. அப்படியானால் நெல் உற்பத்தியாளர்களின் பொருளாதாரம் பூச்சியமாக மாறும். மரக்கறி உற்பத்தியும் அப்படிதான். விளைச்சல் குறைவடைந்ததன் காரணமாகவே மரக்கறிகளின் விலை உயர்ந்துள்ளது.
தேயிலை உற்பத்தியும் அவ்வாறு தான் எமது தேயிலை வெளிநாடுகளுக்கே அதிகம் ஏற்றுமதி செய்யப்படுகின்றது.
எனவே இவர்களின் செயற்பாடுகளால் தேயிலை உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஜனாதிபதியுடன் இருக்கும் ஒரு சில மனநலம் குன்றியவர்களின் ஆலோசனைகளே காரணம் எனவும் இதன்போது தெரிவித்துள்ளார்.


ஸ்பெயினில் இருந்து மொராக்கோவிற்கு திரும்பிய 37,500 அகதிகள்: பலி எண்ணிக்கை 57 ஆக அதிகரிப்பு News Lankasri