பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் பெண் தொழிலதிபர் கைது
சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட மின்னணு சிகரெட்டுகளுடன் பெண் தொழிலதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த கைது நடவடிக்கையானது பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக 262 மின்னணு சிகரெட்டுகளை நாட்டிற்குள் கொண்டு வந்து கட்டுநாயக்க விமான நிலையத்தில் விட்டுச் சென்ற போதே இந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் பிணையில் விடுதலை
சம்பவத்தில் கைது செய்யப்பட்ட பெண் கொழும்பு- தெமட்டகொட பகுதியில் வசிக்கும் 32 வயதுடைய தொழிலதிபர் என தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது, கைது செய்யப்பட்ட பெண்ணிடமிருந்து மீட்கப்பட்ட சிகரெட் கையிருப்பின் மதிப்பு மூன்று மில்லியன் ரூபாவை தாண்டியுள்ளதாகவும் பணியக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
தற்போது சந்தேகநபர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் 7 ஆம் திகதி நீர்கொழும்பு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 13 மணி நேரம் முன்

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri

ஜாய் கிரிசில்டா பேச்சால் பல கோடி நஷ்டம்.. நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த மாதம்பட்டி ரங்கராஜ் Cineulagam
