காலி கொலைச் சம்பவம் : நீண்ட விசாரணையின் பின் கொலையாளிகள் கைது
காலி, தங்கேதர பகுதியில் கடந்த வாரம் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவர், காலி மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் நேற்றுமுன்தினம்((20.05.2026) கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 12ஆம் திகதி காலை தங்கேதர, டிக்சன் சந்தி பகுதியில் காரில் வந்த இனந்தெரியாத ஆயுததாரிகளால் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 44 வயதுடைய நபர் ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருந்தார்.
கபில சந்திரசேனவின் மரண விசாரணைகளில் வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்! அரவிந்தவின் வீட்டில் இரவு இருந்த மற்றுமொரு நபர்..
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள்
இந்த விபரீத சம்பவத்தில் உயிரிழந்தவர் வட்டிக்குப் பணம் வழங்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தவர் என்று பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
அத்துடன், நீண்டகாலமாக நிலவி வந்த பணக் கொடுக்கல் - வாங்கல் தகராறு காரணமாகவே இந்தக் கொலைச் சம்பவம் அரங்கேறியிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் காலி மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினர் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையிலேயே, கொலையுடன் நேரடியாகத் தொடர்புடைய இரு சந்தேகநபர்கள் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.