வெளிநாட்டுக்கு தப்பிச்செல்ல முயன்ற வர்த்தகர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது
மினுவாங்கொடை நீதிமன்றத்தினால் வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள வர்த்தகர் ஒருவர் தாய்லாந்துக்கு தப்பிச் செல்வதற்காக கட்டுநாயக்கவிற்கு வந்த போது குடிவரவு திணைக்களத்தின் எல்லை அமுலாக்கப்பிரிவின் அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கொழும்பு பிரதேசத்தில் வசிக்கும் 64 வயதான வர்த்தகர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று முன்தினம் அதிகாலை 01.08க்கு தாய்லாந்தின் பேங்கொக் நகருக்குப் புறப்படவிருந்த தாய் எயார்வேஸ் விமானமான TG-308 இல் ஏறுவதற்காக அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
போலி கடவுச்சீட்டு
இதன்போது வர்த்தகர் விமான அனுமதியை முடித்துக்கொண்டு விமான நிலைய குடிவரவு பிரிவுக்கு வந்த போது, கடமையில் ஈடுபட்டிருந்த குடிவரவு அதிகாரி சந்தேகத்தின் அடிப்படையில் ஆவணங்களை சரிபார்த்து பிரதான குடிவரவு அதிகாரியிடம் ஒப்படைத்துள்ளார்.
இதன்போது முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், தொழிலதிபர் மற்றும் அவரது ஆவணங்களை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் எல்லை அமுலாக்க பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், கடவுச்சீட்டு போலியானது எனவும், அதில் பதியப்பட்டிருந்த குடிவரவு முத்திரைகள் போலி எனவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam

ட்ரம்புக்கு பதிலடி... 8,000 அமெரிக்க தயாரிப்புகள் மீது வரி விதிக்க பிரித்தானியா முடிவு News Lankasri

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

40 வயது நடிகருக்கு ஜோடியாகும் நாக சைதன்யாவின் மனைவி சோபிதா.. திருமணத்திற்கு பின் கிடைத்த தமிழ் படம் Cineulagam
