கொடூரமாக தாக்கப்பட்டு கடத்தப்பட்ட வர்த்தகர் மீட்பு! மருத்துவமனையில் அனுமதி

Sri Lanka Police Kalutara Kidnapping
By Vethu Sep 30, 2026 05:39 AM GMT
Report

புதிய இணைப்பு

பாணந்துறை பிரதேசத்தில் நேற்றிரவு கடத்தப்பட்ட வர்த்தகர் தற்போதைக்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பின் புறநகர் பகுதியான பாணந்துறையில் வர்த்தகர் ஒருவர் தனது வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்த போது, ​​அடையாளம் தெரியாத குழுவினால் கடத்தப்பட்டிருந்தார்.

பாணந்துறை, மகாநாம வீதிக்கு அருகில் நேற்றிரவு 10 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றிருந்தது. வர்த்தகர் தனது இரு மகள்களுடனும் மனைவியுடனும் காரில் பயணித்த நிலையில் குறித்த சம்பவம் இடம்பெற்றிருந்தது.

இதன் போது, ​​வீட்டிற்கு அருகில் காரில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள், வர்த்தகரைத் தாக்கி அவரது காரின் கண்ணாடிகளை உடைத்துக் கடத்திச் சென்றிருந்தனர்.

பணம் கொடுக்கல் வாங்கல் சம்பவம்

இந்தச் சம்பவத்தில் வர்த்தகரின் இரு மகள்களுக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. எனினும் அவரது மனைவி சம்பவத்தில் காயமடைந்து பாணந்துறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

கொடூரமாக தாக்கப்பட்டு கடத்தப்பட்ட வர்த்தகர் மீட்பு! மருத்துவமனையில் அனுமதி | Business Man Kidnapped In Colombo

இந்நிலையில் கடத்தப்பட்ட வர்த்தகர் தற்போதைக்கு மினுவன்பிட்டிய மயானம் அருகே கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

தற்போதைக்கு அவரது மனைவி சிகிச்சை பெறும் அதே மருத்துவமனையில் குறித்த வர்த்தகரும் அனுமதிக்கப்பட்டுள்ளார். பணம் கொடுக்கல் வாங்கல் சம்பவம் ஒன்று தொடர்பாகவே குறித்த கடத்தல் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. சந்தேக நபர்களைக் கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.  

மேலதிக தகவல் - அனதி

முதலாம் இணைப்பு

கொழும்பின் புறநகர் பகுதியான பாணந்துறையில் வர்த்தகர் ஒருவர் தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது, ​​அடையாளம் தெரியாத குழுவினால் கடத்தப்பட்டுள்ளார்.

பாணந்துறை, மகாநாம வீதிக்கு அருகில் உள்ள உப வீதியொன்றில், இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நேற்று இரவு 10 மணியளவில் குறித்த வர்த்தகர் தனது இரு மகள்களுடனும் மனைவியுடனும் காரில் வீட்டிற்கு சென்றுக் கொண்டிருந்தனர்.

வர்த்தகர் கடத்தல்

இதன் போது, ​​வீட்டிற்கு அருகில் காரில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள், வர்த்தகரைத் தாக்கி அவரது காரின் கண்ணாடிகளை உடைத்துக் கடத்திச் சென்றுள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.

கொடூரமாக தாக்கப்பட்டு கடத்தப்பட்ட வர்த்தகர் மீட்பு! மருத்துவமனையில் அனுமதி | Business Man Kidnapped In Colombo

இந்தச் சம்பவத்தில் வர்த்தகரின் இரு மகள்களுக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. சம்பவத்தில் காயமடைந்த மனைவி பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அடையாளம் தெரியாத குழுவினர் குறித்த வர்த்தகரைக் கடத்த முயன்றபோது, ​​​​வர்த்தகர் தனது காரை நிறுத்தாமல் தொடர்ந்தும் செலுத்தியுள்ளார்.

பொலிஸார் விசாரணை

இதன்போது கார் கட்டுப்பாட்டை இழந்து வீதியிலிருந்த வடிகானில் விழுந்துள்ளது. பின்னர் கடத்தல் கும்பல், வர்த்தகரின் காரின் கண்ணாடிகளை உடைத்து, வர்த்தகரை வெளியே இழுத்துத் தாக்கியதுடன், அவர்களின் காரில் ஏற்றிச் சென்றுள்ளனர்.

இந்த கடத்தல் நடவடிக்கையின் போது வர்த்தகரின் காருக்குப் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

இந்த கடத்தலை வர்த்தகரின் உறவினர் ஒருவரே திட்டமிட்டு கடத்தியுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.

சந்தேக நபர்களை கைது செய்வதற்காக பாணந்துறை பொலிஸார் விசேட விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கோட்டாபயவுக்கு ஏற்பட்டுள்ள மறதி நோய்.. நீதிமன்றத்தில் தடுமாறிய நிலை

கோட்டாபயவுக்கு ஏற்பட்டுள்ள மறதி நோய்.. நீதிமன்றத்தில் தடுமாறிய நிலை

பாரியளவு போதைப் பொருளுடன் விமான நிலையத்தில் சிக்கிய கொழும்பு வர்த்தகர்

பாரியளவு போதைப் பொருளுடன் விமான நிலையத்தில் சிக்கிய கொழும்பு வர்த்தகர்

12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US