வவுனியாவில் வியாபார ஒத்துழைப்பு மையம் திறந்து வைப்பு
நாட்டின் தொழில் நுட்ப சேவைகள் மற்றும் உதவி மையம், தொழில்நுட்ப அமைச்சர் கிருஷாந்த அபேரத்ன தலைமையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
வவுனியா, பல்கலைக்கழக வளாகத்தில் இந்த மையம் நேற்று(23.01.2026)திறந்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வியாபார ஒத்துழைப்பு மையம் ஆரம்பம்
தொழில்முனைவு, புதுமை, ஆராய்ச்சி, வணிகமயமாக்கல், வணிக மேம்பாடு, தொழில்நுட்ப சேவைகள் மற்றும் உதவிகள் ஆகியவை இதன் மூலம் வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொழில் முனைவோருக்கு ஒத்துழைப்பை வழங்குவதை நோக்கமாக கொண்டு வியாபாரத்திற்கு ஒத்துழைப்பு வழங்குகின்ற நிறுவனங்களை பல்கலைக்கழகங்களை மையமாக வைத்து ஆரம்பிப்பிக்கும் நோக்கத்துடன் வவுனியா பல்கலைக்கழகத்தில் குறித்த ஆய்வு நிறுவனம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, முன்னணி தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் இணைந்து ஏற்பாடு செய்த அறிவியல், தொழில்நுட்ப கண்காட்சியும் அமைச்சர்களால் திறந்து வைக்கப்பட்டது.
இதன்போது, வவுனியா, மன்னார் மற்றும் முல்லைத்தீவு இளைஞர்களின் கண்டுபிடிப்புக்கள், கழகங்கள் மற்றும் அறிவியல் சங்கங்கள் நிறுவப்படும் நிகழ்வும் இந்த கண்காட்சியில், பல்கலைக்கழக மாணவர்கள், பாடசாலை மாணவர்களும் பங்கேற்றுள்ளனர்.
இதன்மூலம் வடமாகாணத்தில் முதன் முதலாக தரச்சான்றிதழ் பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிகழ்வுக்கு கைத்தொழில் அமைச்சர் சுனில் கெந்துன்நெத்தி, விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சர் கிரிசாந்த அபேயசேன, வன்னி நாடாளுமன்ற உறுப்பினர்களான எம். ஜெகதீஸ்வரன், எஸ். திலகநாதன், பல்கலைக்கழக வேந்தர், துணைவேந்தர் அ. அற்புதராஜா உட்பட அமைச்சின அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

