தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்ட பேருந்துகள் : ஜனாதிபதியின் நடவடிக்கை
தேசிய மக்கள் சக்தியின் மே தின பேரணிக்காக கொழும்பு நோக்கி பயணித்த பேருந்துகள் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்ட சம்பவத்தை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க விமர்சித்துள்ளார்.
அத்துடன், பொறுப்பானவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
பொறுப்பான அமைப்பாளர்களின் பட்டியல்
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், இது தொடர்பில் கருத்துரைத்த அவர், பேருந்துகளை அங்கு நிறுத்த அனுமதித்த ஓட்டுநர்கள், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் அதை ஆதரித்த தேசிய மக்கள் சக்தி அமைப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இது நடந்திருக்கக் கூடாத சம்பவம் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
ஒவ்வொரு பேருந்திற்கும் பொறுப்பாக ஒரு அமைப்பாளர் நியமிக்கப்பட்திருந்தனர். எனவே, அதிவேக நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்ட குறிப்பிட்ட பேருந்துகளுக்குப் பொறுப்பான அமைப்பாளர்களின் பட்டியலைத் தாம் கேட்டுள்ளதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |