மீன் ஏற்றுவதற்காக அனுப்பப்பட்ட பேருந்து இப்போது பயணிகள் சேவையில்..! யாழில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

Jaffna Douglas Devananda
By Erimalai Sep 06, 2026 05:02 AM GMT
Report

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சராகவிருந்த காலப்பகுதியில் மீன் ஏற்றுவதற்காக அனுப்பப்பட்ட பேருந்துகளே இப்போதும் வடமராட்சி கிழக்கில் சேவையில் ஈடுபடுவதாக பருத்தித்துறை பிரதேசசபை உறுப்பினர் பி.அலஸ்ரன் தெரிவித்துள்ளார்.

அரச பேருந்துகள் தொடர்ச்சியாக பழுதடைவதால் பயணிகள் பாதிக்கப்படுவது தொடர்பாக கருத்து தெரிவித்த போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், "யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மக்கள் அரச பேருந்தை நாளாந்தம் தள்ளித்திரிந்து இயக்கி பயணம் மேற்கொள்கின்றனர்.

காலை 06.00 கட்டைக்காட்டில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணிக்கும் அரச பேருந்தை பழுது காரணமாக சில நாட்களாக மாணவர்கள், மக்கள் சேர்ந்து தள்ளித்திரிந்து ஸ்ராட் பண்ணும் சம்பவம் இடம்பெறுகின்றது.

தொடர் சிரமங்கள்.. 

மக்கள் தள்ளியும் பேருந்து இயங்காது போனால் சம நேரத்தில் பருத்தித்துறைக்கு பயணிக்கும் அரச பேருந்தால் குறித்த பேருந்து கட்டி இழுக்கப்பட்டு ஸ்ராட் செய்யப்படுகின்றது.

மீன் ஏற்றுவதற்காக அனுப்பப்பட்ட பேருந்து இப்போது பயணிகள் சேவையில்..! யாழில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு | Bus Transport Fish Douglas Now Passenger Service

கடந்த வெள்ளிக்கிழமை காலை 06.00 மணிக்கு வழமை போன்று பாடசாலை மாணவர்களோடு பொதுமக்கள் குறித்த பேருந்தை தள்ளி இயக்க முயன்றபோது பேருந்து இயங்கவில்லை.

பின்பு பருத்தித்துறை நோக்கி பயணிக்கவிருந்த அரச பேருந்து மூலம் கட்டி இழுத்து இயக்க முயன்ற வேளையும் பேருந்து இயங்கவில்லை.

இதனால் காலை 06.00 மணிக்கு கட்டைக்காட்டில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணிக்கும் அரச பேருந்து பயணிக்காததால் மாணவர்கள், அரச உத்தியோகத்தர்கள் என பலரும் பாதிப்படைந்தனர்.

மீன் ஏற்றுவதற்காக அனுப்பப்பட்ட பேருந்து இப்போது பயணிகள் சேவையில்..! யாழில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு | Bus Transport Fish Douglas Now Passenger Service 

வடமராட்சி கிழக்கில் சேவையிலீடுபடும் அரச பேருந்துகள் மிக பழமையானது, முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சராக இருந்த காலத்தில் மீனை ஏற்றி செல்வதற்காக விடப்பட்ட பேருந்துகள் இவை.

தரமற்ற பேருந்துகளால் வடமராட்சி கிழக்கு மக்கள் தொடர்ந்தும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். இவ்வாறான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யுமாறுதான் நாம் கேட்கின்றோம்.

அதனைவிடுத்து மக்கள் விரும்பாத மசாஜ் நிலையங்களை கொண்டுவர துடிக்கிறார்கள். சமூகத்தை சீரழிக்கும் மசாஜ் நிலையம் போன்ற அபிவிருத்திகளை செய்வதற்கு ஆர்வம் காட்டுவதை விடுத்து ரஜீவன் எம்பி போன்றவர்கள் மக்கள் கேட்கும் தரமான பேருந்து சேவையை வளங்க வழி செய்ய வேண்டும்" என தெரிவித்தார்.

2032ஆம் ஆண்டளவில் இலங்கையில் ஏற்படவுள்ள மாற்றம்! வட மாகாண ஆளுநர் கூறும் விடயம்

2032ஆம் ஆண்டளவில் இலங்கையில் ஏற்படவுள்ள மாற்றம்! வட மாகாண ஆளுநர் கூறும் விடயம்

மணல் திட்டில் சிக்கித் தவித்த 11 இலங்கை ஏதிலிகள் - அதிரடியாக மீட்ட கடற்படையினர்

மணல் திட்டில் சிக்கித் தவித்த 11 இலங்கை ஏதிலிகள் - அதிரடியாக மீட்ட கடற்படையினர்

நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 21

மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US