பாடசாலை மாணவிகளை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து - அதிகாலையில் நடந்த துயரம்
வரக்காபொல பிரதேசத்தில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று இன்று காலை வரக்காபொல நகரில் கால்வாய்க்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்த 13 பாடசாலை மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் சிகிச்சைக்காக வரகாபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மாணவர்கள் பேருந்து விபத்து
மாலபே ராகுல வித்தியாலயத்தில் இருந்து ரெண்டம்பே நோக்கி மாணவர்கள் குழுவொன்றை ஏற்றிச் சென்ற பேரூந்தே விபத்துக்குள்ளாகியுள்ளது.

சுமார் 26 மாணவிகள் மற்றும் 07 பெற்றோர்கள் ரெண்டம்பேவில் உள்ள முகாமுக்குச் சென்று கொண்டிருந்த போது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து வரக்காபொல நகரில் உள்ள கால்வாயில் கவிழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வரக்காபொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
போரை தொடங்குமா பாகிஸ்தான்? - அமெரிக்கா உடன் ரகசிய ஒப்பந்தம்; பேச்சுவார்த்தையில் வெளிநடப்பு News Lankasri