காரைநகர் - யாழ்ப்பாணம் இடையில் மீண்டும் பேருந்து சேவை ஆரம்பம் (Photos)
யாழ்ப்பாணம் மற்றும் காரைநகர் இடையிலான 785/1 பேருந்து சேவை இன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இப்பேருந்தானது காரைநகரிலிருந்து பயணத்தை தொடங்கி யாழ். சென்று மீண்டும் மதியம் 1.20 ற்கு யாழ்பாணத்திலிருந்து பயணத்தை ஆரம்பித்து காரைநகரை சென்றடையும் என தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த காலங்களில் கொரோனா பேரிடர், பொருளாதார நெருக்கடி மற்றும் ஏனைய சில காரணங்களால் சேவையை தொடர்வதில் சிரமங்களை எதிர்கொண்டு போக்குவரத்து தடைப்பட்டது.
பேருந்து சேவை
இதன் காரணமாக மக்கள் பல சிரமங்களை எதிர்கொண்டனர். மேலும் டச்சு வீதியின் சேதங்கள் காரணமாகவும் பேருந்து போக்குவரத்து செய்ய முடியாத நிலை சுட்டிக்காட்டப்பட்டது.
இதனையடுத்து, கடந்த வாரம் டச்சு வீதி புனரமைக்கப்பட்டதோடு பேருந்து போக்குவரத்தினை முன்னெடுப்பதற்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
இன்று முதல் இச்சேவை ஆரம்பிக்கபட்டுள்ளதால் பேருந்தின் நேர அட்டவணையை பின்பற்றி பயனாளிகள் பயன் பெற முடியும். மேலும், பாடசாலை மாணவர்கள், வைத்திய சாலை செல்வோர், யாழ்ப்பாணம் செல்வோர் ஆகியோருக்கு இது மிகவும் பயனுடையதாக இருக்கும்.
மூளாய் டச்சு வீதி ஆரம்பம் முதல் சித்தன்கேணி டச்சு வீதி முடிவு வரையான வீதி பகுதியில் வாழும் மக்களின் போக்குவரத்து வசதியினை இலகுபடுத்துவதே இப் பேருந்து வழித்தடத்தின் பிரதான நோக்காகும் என தெரிவிக்கப்படுகின்றது.





துளி கூட மேக்கப் போடாமல், முகத்தில் சுருக்கங்கள் உடன் தொகுப்பாளினி டிடி வெளியிட்ட புகைப்படம்.. எப்படி இருக்கிறார் பாருங்க Cineulagam

அதிரவைக்கும் திருப்பம்... இஸ்ரேல் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரும் உலகளாவிய யூத பிரபலங்கள் News Lankasri

இன்னும் 2 நாட்களில் நடக்கவிருக்கும் புதன் பெயர்ச்சி- தலைவிதியே மாறப் போகும் ராசியினர் யார்? Manithan
