மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவையை ஆரம்பிப்பது குறித்து வெளியாகியுள்ள தகவல்
மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவையினை ஆரம்பிப்பது தொடர்பில் தகவலொன்று வெளியாகியுள்ளது.
அதன்படி அனுமதி கிடைத்தால் நாளை முதல் மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவையை முன்னெடுக்க தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை இலங்கை போக்குவரத்து சபையின் உதவி பொதுமுகாமையாளர் பண்டுவ சுவர்ணசிங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் பாடசாலைகளை திறப்பதன் முதற்கட்டமாக நாளைய தினம் 200இற்கும் குறைவான மாணவர்களை கொண்ட பாடசாலைகள் மீள திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் மாணவர்களை பாடசாலைகளுக்கு கொண்டு செல்லும் சிசுசரிய பேருந்து சேவைகளை முன்னெடுப்பதற்கான சகல ஏற்பாடுகளும் முழுமையாக மேற்கொள்ளப்பட்டுள்ளன எனவும் குறிப்பிட்டுள்ளார்.





உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri

ஜுராசிக் வேர்ல்ட் ரீபர்த், சூப்பர்மேன் படங்களின் வசூல் விவரம்.. இதுவரை இத்தனை ஆயிரம் கோடியா Cineulagam
