ரணில் தொடர்பில் பசில் எடுத்துள்ள தீர்மானம்..!
அமைச்சுப் பதவிகள் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதிப் பதவியில் இருந்து பாதுகாக்க வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிறுவுநர் பசில் ராஜபக்ச முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மொட்டுக் கட்சியின் முக்கியஸ்தர்களுக்கும், பசிலுக்கும் இடையில் இறுதியாக நடைபெற்ற சந்திப்பிலேயே இந்தத் தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.
மொட்டுக் கட்சியினருக்கு அமைச்சுப் பதவி
மொட்டுக் கட்சி முக்கியஸ்தர்கள் 10 பேருக்கு அமைச்சுப் பதவிகள் வழங்காமல் ஜனாதிபதி இழுத்தடித்து வருகின்றார்.
இதனால் மொட்டுக் கட்சியினர் ரணிலுடன் மனஸ்தாபப்பட்டுக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
எனினும், அமைச்சுப் பதவி கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் ரணிலை ஜனாதிபதிப் பதவியில் இருந்து பாதுகாப்பதன் மூலம்தான் மொட்டுக் கட்சியைக் காப்பாற்ற முடியும் என்ற நிலை இருப்பதால் பசில் குறித்த முடிவை எடுத்துள்ளார் என்று அறியமுடிகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

குணசேகரன் குறித்து சாமியார் கூறிய உண்மை, அடிக்கச்சென்ற கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan

அமெரிக்காவில் தோசையால் புகழ்பெற்ற இலங்கை தமிழர்! கனடா, ஜப்பானிலும் ரசிகர்கள்..யார் அவர்? News Lankasri

சூட்டிங் சென்ற மாதம்பட்டி திரும்பி வீட்டுக்கு வராதது ஏன்? குழந்தைக்கு நியாயம் கேட்கும் ஜாய்! Manithan
