எரிபொருள் விலை குறைப்பு - பேருந்து கட்டணங்கள் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்
எரிபொருள் விலை குறைப்பின் அடிப்படையில் பயணிகள் போக்குவரத்து கட்டணத்தை குறைக்க தயாராக இல்லை என தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
எரிபொருள் விலை குறைக்கப்பட்டடுள்ள போதிலும் பேருந்து தொழில்துறைக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
உதிரி பாகங்களின் விலை அதிகரிப்பு
இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “சங்கம் என்ற ரீதியில் இந்த விடயத்தில் இன்னும் முடிவெடுக்க முடியவில்லை. நடைமுறையில் பேருந்து கட்டணத்தை குறைப்பது குறித்து முடிவு எடுக்க முடியவில்லை.
ஏனெனில் தீவிரமான அணுகுமுறை இருக்கிறது. சமீபகாலமாக உதிரி பாகங்களின் விலை அதிகரித்து விட்டதால், நாங்கள் இதில் தலையிடவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும், பேருந்து தொழிற்துறை மேலும் பல நெருக்கடிகளை சந்தித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எரிபொருள் விலை குறைப்பு
இதேவேளை, நேற்று இரவு முதல் 92 ஒக்டேன் ரக லீற்றர்பெட்ரோலின் விலை 40 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஒரு லீற்றர் ஆட்டோ டீசலின் விலையும் 15 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 92 ஒக்டேன் ரக லீற்றர் பெட்ரோலின் புதிய விலை 370 ரூபாவாகவும், ஒரு லீற்றர் ஆட்டோ டீசலின் புதிய விலை 415 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.