எரிபொருள் விலை அதிகரிப்பு! - பேருந்து கட்டணமும் உயர்வு
பேருந்து கட்டணத்தை அதிகரிக்க உள்ளதாக அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் அஞ்சன பிரின்ஜித் இதனை தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், தற்போதையை டீசல் விலை உயர்வு காரணமாக 15 சதவீத பேருந்து கட்டண உயர்வுக்கு செல்ல உள்ளதாக தெரிவித்திருந்தார்.
அத்துடன், தனிமைப்படுத்தல் சட்டத்திற்கு அமைய ஆசனங்களுக்கு மாத்திரம் பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டுமானால் கட்டாயமாக நூற்றுக்கு 25 சதவீத கட்டண அதிகரிப்பிற்கு செல்ல நேரிடும் என அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, ஒக்டேன் 92 ரக பெற்றோல் ஒரு லீற்றரை 94.25 ரூபாவுக்கு வழங்க அரசாங்கத்திற்கு இயலுமை உள்ளதாக கனிய வள தொழிற்சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
முத்துவிடம் ரோஹினி பற்றிய முழு உண்மையை கூறிய PA தினேஷ்... சிறகடிக்க ஆசை சீரியல் புதிய புரொமோ Cineulagam
மருத்துவமனை மீது பாகிஸ்தான் நடத்திய மிக மோசமான குண்டு வீச்சு... 400 கடந்த பலி எண்ணிக்கை News Lankasri