ஒரு ரூபாவாலும் பேருந்து கட்டணம் அதிகரிக்கப்படாது! - இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு
எரிபொருள் விலை அதிகரிப்பால் பாதிக்கப்பட்டுள்ள பேருந்து உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது.
அதேவேளை, ஒரு ரூபாவிலேனும் பஸ் கட்டணத்தை அதிகரிக்கப் போவதில்லையென்பதைத் தௌிவாக கூறுகின்றேன் என பேருந்து போக்குவரத்துச் சேவைகள் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம ஊடகங்களிடம் தெரிவித்தார்.
இதுவரை பொதுமக்களுக்கு இயலுமானவரை பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டு விட்டன எனவும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த காலங்களில் பயணத் தடை காரணமாக இருக்கைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்ட போது, பஸ் கட்டணத்தில் 20 வீத திருத்தம் மேற்கொள்ளப்பட்டமையால் இந்ததடவை கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் கூறினார்.
இந்தநிலையில், பஸ் உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கைகள்
எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 16 மணி நேரம் முன்
என்னை நிம்மதியா விடு, எதாவது பண்ணிக்க போறேன்.. சின்னமருமகள் சீரியல் நடிகை ஸ்வேதா கண்ணீர் வீடியோ Cineulagam
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்... ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா News Lankasri