பேருந்து கட்டண குறைப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு
பேருந்து கட்டணங்கள் குறைக்கப்பட மாட்டாது என அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், மாதாந்த எரிபொருள் விலைச்சூத்திரத்துக்கு அமைய நேற்று புதன்கிழமை (30) நள்ளிரவுடன் எரிபொருள் விலைக்கட்டணம் திருத்தம் செய்யப்பட்டது.
பேருந்து கட்டணம்
இம்முறை டீசலின் விலை 12 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலைக்குறைப்புக்கு அமைய பேருந்து கட்டணத்தை குறைக்க முடியாது.நான்கு மாதங்களுக்கு முன்னர் பேருந்து கட்டணம் 3 ரூபாவால் அதிகரிக்கப்பட்டது.
அதற்கு முன்னர் எரிபொருள் கட்டண குறைப்புக்கு அமைய பேருந்து கட்டணத்தை குறைப்பதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு எடுக்க தீர்மானத்துக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கினோம்.
பேருந்து கட்டண சூத்திரம் 20 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது.இதற்கு முரணாக எம்மால் செயற்பட முடியாது. டீசலின் விலை 25-30 ரூபா வரையில் குறைக்கப்பட்டிருந்தால் பேருந்து கட்டணத்தை குறைக்க முடியும் எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan

தங்கம், வெள்ளி நகைகளை ஏன் பிங்க் நிற பேப்பரில் சுற்றி தருகிறார்கள்? பலருக்கும் தெரியாத ரகசியம்! Manithan

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri

உலக சாதனை செய்துள்ள சூப்பர் சிங்கர் புகழ் சரண் ராஜா... இன்ப அதிர்ச்சியில் அரங்கம், வீடியோ இதோ Cineulagam
