பேருந்து கட்டண திருத்தம் தொடர்பில் வெளியான தகவல்
தற்போதைக்கு பேருந்து கட்டண திருத்தம் குறித்து பரிசீலிக்க முடியாது என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் (LPBOA) தலைவர் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் இன்று (1.4.2024) உரையாற்றும் போதே இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் (LPBOA) தலைவர் கெமுனு விஜேரத்ன (Kemunu Wijeratna) இதனைத் தெரிவித்துள்ளார்.
எனினும் லங்கா சுப்பர் டீசலின் விலைகள் மேலும் குறையும் பட்சத்தில் இதனைப் பேருந்துகள் பயன்படுத்துவதற்கு முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள் விலை திருத்தம்
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், தனியார் பேருந்துகள் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன.
எரிபொருள் விலை திருத்தம் செய்யப்பட்ட போதிலும், தற்போதைய டீசல் விலை அதிகரிப்பு 4% ஐ தாண்டவில்லை.
லங்கா ஆட்டோ டீசல் விலை 28 ரூபாவால் உயர்த்தப்பட்ட போதும் பேருந்து கட்டணம் உயர்த்தப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுமக்களுக்கு நிவாரணம்
பேருந்து கட்டண திருத்தம் தொடர்பான தேசிய கொள்கை ஜூலையில் திட்டமிடப்பட்டுள்ளது, மேலும் பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்க சங்கம் எதிர்பார்க்கிறது.
இந்த முடிவு நடைமுறையில் உள்ள டொலர் விலை மற்றும் சந்தையில் அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு மற்றும் பேருந்து பாகங்கள், பழுதுபார்ப்பு, உதிரி பாகங்கள் மற்றும் சேவைக் கட்டணங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் எடுக்கப்படும் என அவர் கூறினார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





அய்யனார் துணை, சிறகடிக்க ஆசை, சின்ன மருமகள் ஒன்று சேர்ந்த 3 சீரியல் நாயகிகள்.. என்ன விஷயம், வீடியோவுடன் இதோ Cineulagam

viral video: சிறுவனை கடித்து குதறிய பிட்புல் நாய்... சிரித்து ரசித்துக் கொண்டிருந்த உரிமையாளர்! Manithan

சீனா, ரஷ்யாவை பின்னுக்கு தள்ளி... துருக்கி உருவாக்கும் கொடிய ஆயுதம்: இந்தியாவிற்கு கெட்ட செய்தி News Lankasri

எங்கே எப்போது உலகப் போர் தொடங்கும்... விளாடிமிர் புடின் விரும்பும் நாளேடு வெளியிட்ட தகவல் News Lankasri
