உதிரி பாகங்களின் விலை சடுதியாக உயர்வு - மீண்டும் பேருந்து கட்டணம் உயர்வு
டயர், டியூப் உள்ளிட்ட உதிரி பாகங்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், வருடாந்த பேருந்து கட்டண திருத்தம் ஜூன் மாதம் மேற்கொள்ளப்படும் என அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் கொழும்பு ஊடகம் ஒன்றிடம் இதனை தெரிவித்துள்ளார். எரிபொருள் விலை அதிகரிப்புடன் ஒப்பிடும் போது அண்மையில் பேருந்து கட்டணம் அதிகரிக்கப்பட்ட போதிலும் அது போதுமானதாக இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.
பயணிகளின் எண்ணிக்கையில் பெரும் வீழ்ச்சி
பேருந்துக் கட்டண உயர்வால், பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. இந்நிலையில் பேருந்து தொழில் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
இத்தொழிலுக்கு டீசல் மானியம் வழங்கினால், பழைய கட்டணத்திலேயே பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் அரசிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.
எங்கு பார்த்தாலும் பயணிகள், பேருந்து உரிமையாளர்கள், ஊழியர்கள் தாக்கப்படுகின்றனர். பொது போக்குவரத்து சேவையில் அரசு அதிக கவனம் செலுத்த வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்.. நாயகி இவரா, படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam

ரபேல் போர் விமானத்திற்கு பின்னடைவா? பங்கு சந்தையில் முந்தும் சீனாவின் J-10 போர் விமானம் News Lankasri
