வெளிநாட்டில் இருந்து இலங்கை வந்தவருக்கு அதிர்ச்சி - இளைஞன் ஒருவரின் நெகிழ்ச்சி செயல்
வீதியில் கண்டெடுக்கப்பட்ட பணப்பையை, அதன் உரிமையாளரை கண்டுபிடிக்க முடியாத நிலையில், 4 நாட்கள் தேடிய பின்னர் உரிமையாளரை கண்டுபிடித்து ஒப்படைக்கப்பட்ட நபர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
சுமார் 4 நாட்களுக்கு முன்பு, தம்புள்ளையில் போக்குவரத்து சபை ஓட்டுநராக பணிபுரியும் நிஹால் அனுருத்த அமுனுகம, தம்புள்ள நகரத்திற்கு அருகிலுள்ள வீதியில் ஒரு பணப்பையை கண்டெடுத்துள்ளார்.
அந்தப் பணப்பையில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான ரூபாய் ரொக்கமும், இலங்கை மற்றும் கொரிய நாடுகளின் லொத்தர் சீட்டுகளும் பெறுமதியான தங்க சங்கிலி ஒன்றும் காணப்பட்டுள்ளது.
பணப்பை
அந்தப் பணப்பையில் உரிமையாளரை பற்றிய எந்த தகவலும் இல்லை என அனுருத்த அமுனுகம குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், பணப்பையில் ஒரு கடையிலிருந்து ஒரு சிறிய ரசீதைக் கண்டெடுத்தபோது, நாயக்கும்புர என்ற கிராமத்தில் பையின் உரிமையாளர் வசிப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அவர், தனது மோட்டார் சைக்கிளில் மீண்டும் கடைக்குச் சென்று பொருட்களை வாங்கிய நபர் பற்றிய தகவல்களை தேடியுள்ளார்.
கொரியாவில் வேலை
பின்னர், கடை உரிமையாளரின் ஒத்துழைப்புடன், கடையின் பாதுகாப்பு கமரா காணொளிகள் சரிபார்க்கப்பட்டன, சில நாட்களுக்கு முன்னர் பொருட்களை வாங்கிய நபர் கண்டுபிடிக்கப்பட்டார்.
அதற்கமைய, உரிமையாளர் கண்டுபிடிக்கப்பட்டு பை அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் கொரியாவில் வேலை செய்த நிலையில் இலங்கைக்கு வந்துள்ளார்.
இலங்கையில் இது போன்ற இளைஞர்கள் இருக்கின்றமை நாட்டுக்கு பெருமைக என பணப்பையை தவறவிட்ட உரிமையாளர் நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.





ஊழல் ஒழிப்பு கோஷத்தை ஊளையிடுதல் ஆக்கிய ரணில்..! 22 மணி நேரம் முன்

Vijay Television Awards: அதிக விருதுகளை தட்டிதூக்கிய சீரியல் எது தெரியமா.. வென்றவர்களின் லிஸ்ட் இதோ Cineulagam
