சிறையில் அடைக்கப்பட்டுள்ள 3 அரசியல்வாதிகளின் பரிதாப நிலை
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, வீட்டிலிருந்து உணவைப் பெற்றுக்கொள்ள அனுமதிக்குமாறு சிறைச்சாலை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நேற்று முன்தினம் மதியம் மகசீன் சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்ட பின்னர் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விளக்கமறியல்
சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்ட பின்னர், சிறைச்சாலை மருத்துவர், ராஜிதவை பரிசோதித்த போது, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நிலையில் இல்லை என்பது தெரியவந்தது.
அதற்கமைய, முன்னாள் அமைச்சர் விளக்கமறியல் சிறைச்சாலையின் N பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவருடன் சுமார் 14 கைதிகள் அந்த பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
மேலும், மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவும் மகசீன் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
10 கைதிகளுடன் M2 பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
சிறைச்சாலை வட்டாரங்கள்
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரத்தன தேரர், மகசின் சிறைச்சாலையின் G பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

அந்த பிரிவில் சுமார் 50 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும், அதுரலியே ரத்தன தேரரின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, அந்த பிரிவில் உள்ள ஒரு தனி அறையில் பல கைதிகளுடன் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri