தொலைபேசியை பயன்படுத்திக்கொண்டு பேருந்தை ஓட்டிய சாரதிக்கு விதிக்கப்பட்ட தடை!
கையடக்கத் தொலைபேசியைப் பயன்படுத்திக் கொண்டு கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதற்காக, பயணிகள் பேருந்து ஓட்டுநரின் சேவையை மேற்கு மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை ஏழு நாட்களுக்கு இடைநிறுத்தியுள்ளது.
குறித்த சாரதி கிரிபத்கொட மற்றும் அங்குலானா இடையேயான வழித்தடம் 154 இல் பணிபுரிபவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடைநீக்கத்திற்கு கூடுதலாக, அவர் சாரதி பயிற்சி பட்டறைக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
நடத்துனர் மீதும் நடவடிக்கை
இதன்படி சம்பவத்துடன் தொடர்புடைய பேருந்தின் நடத்துனர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதன்படி ஒரு பயணிக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்திற்கு பயணச்சீட்டை வழங்காத குற்றச்சாட்டில் அவர் ஒரு நாள் இடைநீக்கம் செய்யப்பட்டு, திருத்தப் பயிற்சிக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கடந்த 9 ஆம் திகதி, பௌத்தலோக மாவத்தை வழியாகச் சென்று கொண்டிருந்த இந்தப் பேருந்தின் ஓட்டுநர், கையடக்க தொலைபேசியில் பேசிக் கொண்டே கவனக்குறைவாக ஓட்டுவதை ஒரு பயணி படம் பிடித்துள்ளார்.
பயணிகள் போக்குவரத்து
அந்தப் பயணி, மேற்கு மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து ஆணையத்திடம் எழுத்துப்பூர்வ முறைப்பாடு வழங்கியுள்ளார்.
அந்த முறைப்பாட்டின் அடிப்படையில், பயண கட்டணத்திற்கான சரியான பயணச்சீட்டும் வழங்கப்படவில்லை என்றும், கட்டணத்திற்காக செலுத்தப்பட்ட ரூ.80 இல் மீதமுள்ள ரூ.6 திரும்பப் பெறப்படவில்லை என்றும் நடத்துனர் மீது குற்றம் சாட்டியுள்ளார்.
இதன்படி அதிகாரசபையின் முறைப்பாட்டு பிரிவு மேலாளர் தேஜா ஜெயசுந்தரவின் வழிகாட்டுதலின் கீழ் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, ஓட்டுநர் மற்றும் நடத்துனரின் குற்றங்கள் கண்டுப்பிடடிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



