தனியார் பேருந்து சாரதி போதைப்பொருளுடன் கைது
3 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் தனியார் பேருந்து சாரதி ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று (18.1.2024) எல்ல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
மதிய உணவுப் பொட்டலம்
கொழும்பில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த தனியார் பயணிகள் பேருந்தை மாஹோ பொலிஸார் நேற்று (18.1.2024) சோதனையிட்டுள்ளனர்.

சோதனையின் போது, ஓட்டுநரின் மதிய உணவுப் பொட்டலம் எனக் கூறும் சிறிய சந்தேகத்திற்கிடமான பொதி ஓட்டுநரின் இருக்கைக்கு அருகில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அந்த பொதியை ஆய்வு செய்த பொலிஸார் அதில் இருந்து 143 கிராம் ஹெராயின்
போதைப் பொருளை மீட்டுள்ளனர்.
சந்தேக நபர் 43 வயதான ராஜாங்கனை பிரதேசத்தை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN |
ஆரம்பமாகிய சூர்ய பெயர்ச்சி... பிறந்தது மார்கழி மாதம்! அதிர்ஷ்டத்தை தட்டித்தூக்கும் 6 ராசிகள் Manithan
ஈஸ்வரி பற்றி வந்த போன் கால், பதற்றத்தில் நந்தினி, என்ன ஆனது... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam