அதிவேக நெடுஞ்சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த பேருந்து
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் தொடங்கொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 32 -7R கட்டை பகுதியில் தனியார் பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்தானது இன்று (28) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து ஒன்றே இவ்வாறு தீப்பிடித்து எரிந்துள்ளது.
மேலதிக விசாரணை
இந்த நிலையில், தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் பேருந்தின் தீ அணைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
தீ விபத்து நடந்த நேரத்தில் ஓட்டுநர் மற்றும் மற்றொரு நபர் மட்டுமே அதில் இருந்துள்ளதுடன், இருவரும் காயமின்றி தப்பியுள்ளனர்.
மேலும், தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
