மருத்துவ பணியாளர்களை ஏற்றிச்சென்ற அதி சொகுசு பேருந்து புகையிரதத்தில் மோதி விபத்து
களுத்துறை - வஸ்கடுவ பிரதேசத்தில் மருத்துவ பணியாளர்களை ஏற்றிச் சென்ற அதி சொகுசு பேருந்தொன்று புகையிரதத்தில் மோதி விபத்திற்கு இலக்காகியுள்ளது.
களுத்துறை பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள சுற்றுலாப் பயணிகளுக்கு பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளும் நோக்கில் இந்த மருத்துவ பணியாளர்கள் குறித்த பேருந்தில் பயணித்துள்ளனர்.
புகையிரத கடவையில் வைத்து இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் பேருந்தின் சாரதி படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
விபத்து நேர்ந்த போது பேருந்தில் ஐந்து பெண்கள் உள்ளிட்ட 12 பேர் பயணித்துள்ளனர்.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.





பெண்கள் பதிலடி கொடுத்தும் அடங்காத குணசேகரன், தர்ஷனுக்கு வைத்த செக்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
