தொடரும் கனமழை.. சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
நாட்டில் தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், இதுவரை நாட்டில் பல விபத்துக்கள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கின் காரணமாக வாகனங்களை செலுத்தி சென்ற பலர் இடர்களை எதிர்நோக்கியுள்ளனர்.
விபத்துக்கள்
அந்தவகையில், மொனராகலை பகுதியில் 23 பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.

தற்போது பெய்து வரும் அடைமழை காரணமாக கும்புக்கன் ஓயா பெருக்கெடுத்து ஓடியதால், வெல்லவாய-கொழும்பு பிரதான வீதியின் கும்புக்கன் பகுதி நீரில் மூழ்கியுள்ளது.
இந்த நேரத்தில், 23 பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.
அதன் பின்னர் பேருந்தில் இருந்த பயணிகளை விரைவாக மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும், பேருந்தையும் தண்ணீரில் இருந்து வெளியே எடுத்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |