பனிமூட்டம் காரணமாக பதுளையில் பேருந்து - கார் மோதி விபத்து
பதுளையில் நிலவும் பனிமூட்டம் காரணமாக பேருந்து ஒன்றும் காரொன்றும் ஒன்றுக்கொன்று மோதி விபத்துக்குள்ளாகிய சம்பவம் நடைபெற்றுள்ளது.
பசறை பதுளை வீதியில் ஒன்பதாம் கட்டை கோணகலைக்கு செல்லும் சந்திக்கு அருகாமையில் இந்த விபத்து நடைபெற்றுள்ளது.
பொலிஸார் கோரிக்கை
மட்டக்களப்பில் இருந்து பதுளை நோக்கி சென்று கொண்டிருந்த காரொன்று, பதுளையிலிருந்து பிபிலை நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்றுடன் மோதி விபத்து சம்பவித்துள்ளது.

விபத்தின் காரணமாக கார் வண்டிக்கு சேதம் ஏற்பட்டுள்ளது, எனினும் எவருக்கும் உயிர் சேதமோ காயங்களோ ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளை பசறை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது நாட்டில் நிலவிவரும் சீரற்ற காலநிலையின் காரணமாக பதுளை பகுதியில் கடும் பணிமூட்டம் காணப்படுவதால் வாகன சாரதிகள் கவனமாக பயணிக்குமாறும் பொலிஸார் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

12 கிலோ உடல் எடை குறைத்த நடிகை மைனா நந்தினி.. அதற்கு காரணமான 3 சீக்ரெட் விஷயங்கள் என்ன தெரியுமா, இதோ.. Cineulagam
கருப்பு திரைப்படத்தின் தமிழ்நாடு ஷேர் மற்றும் லாபம் மட்டும் எவ்வளவு தெரியுமா.. இதோ விவரம் Cineulagam