சிவனொளிபாதமலையில் இடம்பெற்ற கோர விபத்து! இருவர் பலி:பலர் படுகாயம்(Photos)
சிவனொளிபாதமலை யாத்திரை சென்ற பேருந்து ஒன்று பள்ளத்தில் பாய்ந்துவிபத்துக்குள்ளானதில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பேருந்து சுமார் 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்கு உள்ளாகி உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நல்லதண்ணியிலிருந்து கினிகத்தேனை தியகல வழியாக கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளானது.
பொலிஸார் விசாரணை

இரத்மலானை பகுதியிலிருந்து சிவனொளிபாதமலைக்கு யாத்திரிகர்களை ஏற்றிச்சென்றிருந்த நிலையில், மீண்டும் இரத்மலானை நோக்கி திரும்பிக்கொண்டிருந்த போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது,பேருந்தில் பயணித்த 28 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்களை உடனடியாக வட்டவளை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு, அங்கிருந்து சிலர் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர். இதன்போது இருவர் உயிரிழந்துள்ளனர்.
இருவர் பலி

மேலும் சிலர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
எதிரே வந்த வாகனம் ஒன்றிற்கு இடமளிக்கும் போதே இந்த விபத்து நேர்ந்ததாக நேரடி விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் நாவலப்பிட்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்து தொடர்பில் நோட்டன்பிரிட்ஜ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



அருண் விஜய் முதல் சாய் அபயங்கார் வரை.. விஜய்யின் TVKவுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்த நட்சத்திரங்கள் லிஸ்ட் Cineulagam
பீகார் சென்ற அய்யனார் துணை குடும்பத்திற்கு ஷாக் கொடுத்த சந்தா அப்பா... புதிய பரபரப்பான புரொமோ Cineulagam