திருகோணமலையில் நடந்த விபரீதம்! - காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 38 ஆக உயர்வு (VIDEO)
புதிய இணைப்பு..
திருகோணமலை - கண்டி பிரதான வீதி மங்குபிரிஞ் பகுதியில் ஆடை தொழிற்சாலைக்கு சொந்தமான தனியார் பேருந்து விபத்துக்குள்ளானதில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 38ஆக உயர்ந்துள்ளது.
இதனிடையே, பேருந்தின் சாரதி படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து அவருக்கு மேற்கொள்ளப்பட்ட அண்டிஜன் பரிசோதனையின் மூலம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
திருகோணமலையில் நடந்த விபரீதம்! - காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்வு
திருகோணமலை - கண்டி பிரதான வீதி மங்குபிரிஞ் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திருகோணமலையில் நடந்த விபரீதம்! - 12 பேர் வைத்தியசாலையில் அனுமதி
திருகோணமலை - கண்டி பிரதான வீதி மங்குபிரிஞ் பகுதியில் ஆடை தொழிற்சாலைக்கு சொந்தமான தனியார் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 12 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில் காயமடைந்தவர்கள் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். குறித்த விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளது.
குச்சவெளி பிரதேசத்தில் இருந்து கப்பல் துறை தனியார் ஆடைத் தொழிற்சாலைக்கு ஊழியர்களை ஏற்றிச் செல்லும் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
விபத்து தொடர்பில் உப்புவெளி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.






Brain Teaser Maths: கணக்கு புலிகளுக்கே சவால் விட்ட புதிர்... உங்களால் தீர்க்க முடியுமா பாருங்கள்? Manithan
