கண்டியில் இடம்பெற்ற பேருந்து விபத்து தொடர்பில் வெளியான புதிய தகவல்
கண்டியில் இயந்திரக் கோளாறு காரணமாக பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் காயமடைந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து பேராதனை கொப்பேகடுவ சந்தியில் யஹலதன்ன பிரதேசத்தில் நேற்று (16) மாலை இடம்பெற்றுள்ளது.
விபத்தில் சாரதி உட்பட 38 பேர் காயமடைந்து, பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
ஹல்பொல, பூண்டுலோயா பகுதியைச் சேர்ந்த 79 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை
இதேவேளை காயமடைந்தவர்களில் இருவர் ஆபத்தான நிலையில் கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பக்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்து நெல்லிகலையில் இருந்து பூண்டுலோயா நோக்கி பயணித்த நிலையில் பேருந்தின் சாரதியால் வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமல் சுமார் 15 மீற்றர் சரிவான வீதியில் சறுக்கிச் சென்று மரமொன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பேராதனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
148 தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளோம் - நேபாளத்திலிருந்து வீடியோ வெளியிட்ட தேச மங்கையற்கரசி News Lankasri
தண்ணீர் மற்றும் டின் உணவுகளைச் சேமித்து வைக்குமாறு மக்களுக்கு பிரித்தானியா அறிவுறுத்தல் News Lankasri