30 பயணிகளுடன் விபத்துக்குள்ளான பேருந்து! பலர் வைத்தியசாலையில் அனுமதி
துன்ஹிந்த நீர்வீழ்ச்சியின் அருகே இன்று காலை ஏற்பட்ட பேருந்து விபத்தொன்றில் ஏழுபேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பதுளை-மஹியங்கனை வீதியின் துன்ஹிந்த சந்தியில் குறித்த பேருந்து விபத்து இடம்பெற்றுள்ளது.
மருத்துவமனையில் அனுமதி
இன்று காலை சுமார் 7.00 மணியளவில் மேற்குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாத்திரிகர்கள் பயணித்த பேருந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
பேருந்தின் பிரேக் கட்டமைப்பு செயலிழந்தமை காரணமாக சாரதி கட்டுப்பாட்டை இழந்த நிலையில் பேருந்து விபத்து ஏற்பட்டதாக பயணிகள் தெரிவித்துள்ளனர்.
விபத்து நடக்கும் போது பேருந்தில் 30 பயணிகள் இருந்துள்ள நிலையில் அவர்களில் ஏழுபேர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் தங்க மயில் தங்க அன்ன வாகன உற்சவம்




