ராகமவில் பேருந்து விபத்து: ஒன்பது மாணவர்கள் உட்பட 12 பேர் காயம்
ராகம, படுவத்த பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் ஒன்பது பாடசாலை மாணவர்கள் உட்பட 12 பேர் காயமடைந்துள்ளனர்.
சபுகஸ்கந்த பகுதியில் உள்ள பாடசாலையை சேர்ந்த சாரணர் குழுொன்று படுவத்தை மகா வித்தியாலயத்தில் நடந்த நிகழ்ச்சியிலில் பங்கேற்று திரும்பிக் கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பேருந்து தடுப்பொன்றில் மோதி கவிழ்ந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
ராகம பொலிஸார் விசாரணை
இருப்பினும், பேருந்தின் தடுப்பான் (பிரேக்குகள்) வேலை செய்யாததால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்த விபத்தின் போது பேருந்தில் 20 மாணவர்கள் இருந்துள்ளமையும் தெரியவந்துள்ளது.
இந்த விபத்து குறித்து ராகம பொலிஸார் மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



