லண்டனில் பிரித்தானிய எம்பி உமாகுமரன் முன்வைத்த இலங்கை தமிழர்கள் தொடர்பில் கோரிக்கை
இலங்கையில் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன் வலியுறுத்தியுள்ளார்.
பிரித்தானியாவில் வாழும் தமிழர்களின் சமூக, பொருளாதார மற்றும் பண்பாட்டு பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், லண்டனில் இடம்பெற்ற தைப்பொங்கல் நிகழ்ச்சியில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மனித உரிமை மீறல்கள்
பிரித்தானிய தமிழர் சமூகத்தின் வெற்றி, நவீன பிரித்தானியாவின் வாக்குறுதியையும், புலம்பெயர் தமிழ் சமூகத்தின் திட நம்பிக்கை மற்றும் உறுதியை வெளிப்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமது பெற்றோர் இலங்கையில் இழந்த வாய்ப்புகளை மீண்டும் கட்டியெழுப்ப, பிரித்தானியாவில் கடினமாக உழைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்களுக்கு, நீதி கிடைக்க வேண்டும் என்ற தமது அரசாங்கத்தின் நிலைப்பாட்டையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதன் ஒரு பகுதியாக, போர் குற்றவாளிகளுக்கு எதிராக பிரித்தானிய வெளிவிவகார அலுவலகம் விதித்துள்ள தண்டனைகளையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
நேட்டோ தலைவருடன் சந்திப்பு... பிரித்தானியா உட்பட 8 நாடுகள் மீதான வரியை ரத்து செய்த ட்ரம்ப் News Lankasri
அண்ணன்கள் வீட்டில் ஏற்பட்ட அவமானம், அழுத கோமதிக்கு வந்த சந்தோஷ செய்தி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 கொண்டாட்ட எபிசோட் Cineulagam