மூன்றாவது துயர சம்பவம்! பாடசாலை பேருந்து விபத்து: 15 மாணவர்கள் வைத்தியசாலையில்
குளியாப்பிட்டிய பகுதியில் பாடசாலை பேருந்து மற்றும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் 15 பாடசாலை மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
குறித்த விபத்து சம்பவம் இன்று (06.10.2023) காலை குருநாகல் - குளியாப்பிட்டிய பகுதியில் இடம்பெற்றுள்ளது.
பேருந்து விபத்துக்கள்
பாடசாலை மாணவர்களை ஏற்றிவந்த பேருந்து, இலங்கை போக்குவரத்து சபை பேருந்து மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் காயமடைந்த மாணவர்கள் வத்துபிட்டிவல வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் இன்று பகுதிகளில் மூன்று வெவ்வேறு பேருந்து விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதுடன் உயிரிழப்புக்களும் ஏற்பட்டுள்ளது.
மூன்று சம்பவங்கள் குறித்தும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர் என தெரிவிக்கப்படுகின்றது.
ரசிகர்களுக்கு வருத்தமாகத்தான் இருக்கும்.. விஜய் குறித்து வெளிப்படையாக பேசிய நடிகர் சரத்குமார் Cineulagam
ஜேர்மனியில் தொழிற்சாலைகள் மூடப்படுவதால் மற்றொரு ஐரோப்பிய நாட்டிற்க்கு அதிகரிக்கும் வணிக வாய்ப்புகள் News Lankasri