பாலியல் குற்றச்சாட்டு - கனடாவில் தமிழ் இளைஞர் ஒருவர் கைது
பாலியல் குற்றச்சாட்டு தொடர்பில் கனடாவில் தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் அறிவித்துள்ளனர்.
பர்லிங்டன் நகரை சேர்ந்த 23 வயதான சுக்கிரன் ஸ்ரீதரன் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Waterdown and Plains சாலைகளுக்கு அருகில் உள்ள ஆல்டர்ஷாட் உயர்நிலைப் பள்ளி பகுதியில் திங்கள்கிழமை இந்தச் சம்பவங்கள் நடந்ததாக கூறப்படுகின்றது.
அன்றைய தினம் வாகனம் ஒன்றில் வந்த சந்தேகநபர் உயர்நிலைப் பாடசாலை பெண்களை பாலியல் ரீதியாக முன்னிறுத்தி அந்தப் பகுதியில் வாகனம் ஓட்டிச் செல்வது" குறித்கு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

தகவல் வழங்குமாறு பொலிஸார் கோரிக்கை
இதனையடுத்து சந்தேகநபர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். பாடசாலை மாணவிகளை பாலியல் ரீதியாக தூண்டியமை உட்பட அவருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தபோது, பள்ளியின் வாகன நிறுத்துமிடத்தில் வாகனம் ஆளில்லாமல் இருப்பதைக் கண்டதாக ஹால்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் இருப்பின் தகவல் வழங்குமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பற்றியெரியும் ஈரான்... போர்க்களமான தெருக்கள்: இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள வர்த்தகப் பாதிப்பு News Lankasri
அடுத்த பிளானில் அறிவுக்கரசி, அழுது புலம்பும் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
சரிசமப சீசன் 5 போட்டியாளரும், தேவயானி மகளுமான இனியாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்... போட்டோஸ் இதோ Cineulagam