சந்தேகத்திற்கிடமான முறையில் சிசுவின் சடலம் அடக்கம்! நீதிபதி முன்னிலையில் தோண்டி எடுப்பு
சந்தேகத்திற்கிடமான முறையில் அடக்கம் செய்யப்பட்ட பிறந்த சிசுவின் சடலம் நீதிமன்ற உத்தரவின் பேரில் இன்று மாலை தோண்டி எடுக்கப்பட்டது.
கடந்த 2ம் திகதி காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பூநொச்சிமுனை மையவாடியில் குறித்த சிசுவின் சடலம் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
சிசுவின் தாய் வைத்திய பரிசோதனைக்காக சென்றபோது அவரது நடத்தையில் சந்தேகம் ஏற்படவே மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி சிசுவின் தாயை மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்ததுடன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.
அதன்படி மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சீ.றிஸ்வான் குறித்த சடலத்தை தோண்டி எடுத்து விசாரணைக்குட்படுத்துமாறு உத்தரவிடவே இன்று மாலை நீதிபதி முன்னிலையில் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரிகள், உயர் பொலிஸ் அதிகாரிகள், காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட பலர் அங்கு பிரசன்னமாகியிருந்தனர்.
காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுண்டுள்ளனர்.









தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 21 மணி நேரம் முன்
பராசக்தி பட சம்பளம் பாக்கி.. வழக்கு தொடர்ந்த இயக்குநர் சுதா கொங்கரா.. வெளிவருமா இதயம் முரளி Cineulagam
படப்பிடிப்பு தொடங்கும் முன்பே விஜய் சேதுபதி-மணிரத்னம் பட வியாபாரம் முடிந்தது... இத்தனை கோடியா? Cineulagam
அவன் தலையிலேயே அடித்தேன், தலை உடைந்து ரத்தம் கொட்டியது.. சிறு வயது சம்பவத்தை கூறிய நடிகை கயாடு லோஹர் Cineulagam