முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வீட்டில் திருட்டு: ஐவர் கைது(Photos)
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நூர்தீன் மசூரின் வீட்டை உடைத்து திருடிய 5 பேர் புத்தளம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், பிரதி அமைச்சருமான நூர்தீன் மசூரின் வீட்டில் திருட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் வீட்டில் திருட்டு

புத்தளம் நாகவில்லு பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டை, கடந்த 2ஆம் திகதி உடைத்து 160 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய தங்கம், பணம் மற்றும் ஏனைய பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.


இந்த திருட்டு சம்பவம் தொடர்பில் 5 பேர் புத்தளம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது கொள்ளையடித்த சந்தேகநபர்களிடமிருந்து அரைவாசி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் விசாரணை

குறித்த கொள்ளைச் சம்பவத்தில் மேலும் 2 பேர் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக
புத்தளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan
T20 போட்டியில் 188 ஓட்டங்கள் விளாசிய பிரிட்டோரியஸ்; கெயிலின் 13 வருட சாதனை முறியடிப்பு News Lankasri