யாழில் சீமானை ஆதரித்து மாட்டு வண்டி ஊர்வலம்
தமிழக தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில், யாழ்ப்பாணத்தில் பல இடங்களில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானுக்கு ஆதரவாக பதாகைகள் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன.
இதற்கமைய, இன்றையதினம்(22.04.2026) மானிப்பாயில் மாட்டு வண்டி ஊர்வலம் ஒன்றும் இடம்பெற்றது.
சீமானுக்காக நடந்த ஊர்வலம்
மானிப்பாய் பிரதேச சபையின் உறுப்பினர்கள் இணைந்து இதனை முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது, நாம் தமிழர் கட்சி சின்னம் மற்றும் செந்தமிழன் சீமானின் உருவப்படம் அடங்கிய ஆடையை அணிந்து, சீமானுக்கு ஆதரவு தெரிவிக்கும் பதாகையை மாட்டு வண்டியில் கட்டி, ஏரினை சுமந்தவாறு மாட்டுவண்டி ஊர்வலம் இடம்பெற்றுள்ளது.

மானிப்பாய் பிரதேச சபைக்கு முன்பாக ஆரம்பித்த இந்த ஊர்வலமானது மருதடி விநாயகர் ஆலயம் வரை சென்று முடிவடைந்துள்ளது.

