அரச ஊழியர்களுக்கு ஜனாதிபதி இன்று சொல்லப்போகும் மகிழ்ச்சியான செய்தி! சம்பளம் வேகமாக அதிகரிக்கலாம்
வரவு செலவுத் திட்டத்தில் அரச சேவையாளர்களுக்கு கடந்த முறை வழங்கப்பட் சம்பள அதிகரிப்பின் இரண்டாம் கட்டம் அதிகரிக்கப்படவுள்ளதாகவும் மேலும் ஓய்வூதியக்காரர்களின் கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்காக 13,000 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
2026 ஆம் ஆண்டுக்கான அரச செலவினங்களுக்காக 4,434 பில்லியன் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
அஸ்வெசும
அஸ்வெசும வழங்குவதற்காக 24 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.அத்தோடு வாகனங்களுக்கான வரி அதிகரிக்கப்படமாட்டாது.மேலும் நீண்ட கால வேண்டுகோளாக இருந்து பாவித்த வாகனங்கள் இறக்குமதிகள் கைவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் 80ஆவது வரவு செலவுத் திட்டமாகும். நாளை (8) முதல் எதிர்வரும் டிசம்பர் 5ஆம் திகதி வரை இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நடைபெறவுள்ளது.
வாக்கெடுப்பு
நவம்பர் 14ஆம் திகதி மாலை 6 மணிக்கு இரண்டாவது மதிப்பீடுக்கான வாக்கெடுப்பு நடத்தப்படும். இதன் பின்னர் நவம்பர் 15ஆம் திகதி முதல் டிசம்பர் 5ஆம் திகதி வரை 17 நாட்கள் குழுநிலைவிவாதத்தை நடத்துவதற்கும், டிசம்பர் 5ஆம் திகதி மாலை 6 மணிக்கு மூன்றாவது மதிப்பீட்டுக்கான வாக்கெடுப்பை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்தக் காலப்பகுதியில் அரசாங்க விடுமுறைகள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் தவிர சனிக்கிழமை உள்ளிட்ட ஏனைய அனைத்து நாட்களிலும் வரவு-செலவுத் திட்ட விவாதம் நடைபெறும்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 14 மணி நேரம் முன்
2025ஆம் ஆண்டு வசூல் சாதனை படைத்த காந்தாரா தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா? Cineulagam
தாஜ்மகாலுக்கு சுற்றுலா வந்த அமெரிக்க பெண்ணுக்கு பிறந்த கருப்பு நிற குழந்தைகள்! உண்மை என்ன? News Lankasri