ஜனாதிபதியினால் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றில் முன்மொழிவு
தற்போதைய அரசின் இரண்டாவது வரவு - செலவுத் திட்டம், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் இன்று(7) வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்ட முன்மொழிவுகளின் இறுதி வரைவைப் பரிசீலிப்பதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நேற்றுமுன்தினம்(5) இரவு ஜனாதிபதி செயலகத்தில் இணைந்துகொண்டார்.
வரவு செலவுத் திட்டம்
நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெருமவும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாளை வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்ததன் பின்னர், அதன் இரண்டாவது வாசிப்பு குறித்த விவாதம் நவம்பர் 8ஆம் திகதி தொடங்கி ஒரு வாரம் முழுவதும் நடைபெறவுள்ளது.
அதனைத் தொடர்ந்து மூன்றாவது வாசிப்பு ஆரம்பமாகும் என நாடாளுமன்ற வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.