மக்கள் நலன்சார்ந்த வகையில் வரவு செலவு திட்டம்: வியாழேந்திரன் உறுதி

Batticaloa S. Viyalendiran Government Of Sri Lanka
By Kumar Nov 01, 2023 10:13 PM GMT
Report

மக்கள் நலன்சார்ந்த வகையிலேயே இம்முறை வரவு செலவு திட்டம் வெளியிடப்படும் என இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு செங்கலடி பகுதியில் நேற்றையதினம் (01.11.2023) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

இக்கட்டான சூழ்நிலை தற்போதைய ஜனாதிபதி தான் ஆட்சியை பொறுப்பெடுத்தார் விமர்சனங்கள் மாற்றுக்கருத்துக்கள் இருந்தாலும் முடிந்த அளவு சேவைகளை செய்து கொண்டிருக்கின்றார். இந்த நிலைமையில் குழப்பங்களை ஏற்படுத்தி மீண்டும் அதாளபாதளத்திற்கு கொண்டு செல்லமுடியாது.

மக்கள் நலன்சார்ந்த வகையில் வரவு செலவு திட்டம்: வியாழேந்திரன் உறுதி | Budgeting In The Interest Of The People

நாடு ஒரு பொருளாதார வீழ்ச்சியை கண்டு படிப்படியாக மேலே வந்தாலும் இன்னும் விலைகள் குறைக்கப்படவில்லை சில இடங்களில் விலைகள் குறைக்கப்பட்டாலும் அது வர்த்தக நிலையங்களில் குறைக்கப்படவில்லை, எது எவ்வாறாக இருந்தாலும் வருகின்ற வருடம் ஒரு தேர்தலுக்கு அரசாங்கம் முகம் கொடுக்கப் போகின்றது ஒன்றோ இரண்டோ தேர்தல்கள் நடக்கலாம்.

வடக்கு - கிழக்கில் இருந்து கனடா - பிரித்தானியா நோக்கி படையெடுக்கும் பெருமளவு மக்கள் (Video)

வடக்கு - கிழக்கில் இருந்து கனடா - பிரித்தானியா நோக்கி படையெடுக்கும் பெருமளவு மக்கள் (Video)


அது எந்த தேர்தலாகவும் இருக்கலாம். மக்கள் மத்தியில் செல்வதாக இருந்தால் மக்களின் நல் அபிப்பிராயங்களை சம்பாதிக்க வேண்டும். மக்களுக்கான நலன் நோன்பு திட்டத்தை முன்னெடுத்தால் மாத்திரம் தான் அதனை பெற்றுக் கொள்ள முடியும்.

முன்வைத்த முக்கிய கோரிக்கை

அதில் அரசாங்கம் தீவிர கவனம் செலுத்துகின்றது. இந்த வரவு செலவுத் திட்டம் மக்கள் நலன் சார்ந்து இருக்கும் என நான் நினைக்கின்றேன். நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி வருமானம் போதியதாக இல்லை என்கின்ற காரணத்தினால் பல வைத்தியர்கள் தாதியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

சிலர் இன்னும் வெளியேறுகின்றனர், இது சுகாதாரத் துறைக்கு ஒரு பேரிடியாக அமைகின்றது; வைத்தியசாலைகளில் வைத்திய தட்டுப்பாடு இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றது.

இலங்கை அரசு சீர்த்திருத்தங்களை தொடர வேண்டும்: வலியுறுத்திய உலக வங்கி பணிப்பாளர்

இலங்கை அரசு சீர்த்திருத்தங்களை தொடர வேண்டும்: வலியுறுத்திய உலக வங்கி பணிப்பாளர்


வைத்திய சங்கம் சிலர் எனது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர் . அவர்கள் முன்வைத்த முக்கிய கோரிக்கை வரியை குறைக்க வேண்டும் அவர்கள் மீது உள்ள வரி வைத்தியர்களுக்கு பெரும் சுமையாக உள்ளது.

இன்று ஐந்து வைத்தியர் செய்யும் வேலையை ஒரு வைத்தியர் செய்யும் நிலைமை காணப்படுகின்றது. வைத்தியர்களுக்கு உரிய வரி குறைப்பு என்பது முக்கியமானது.

மற்றும் தாதிமார், சுகாதார துறையோடு சேர்ந்தவர்கள் அத்தியாவசிய சேவை வழங்கும் உத்தியோகத்தர்களுக்கு இந்த வரிச் சுமையை குறைத்தாக வேண்டும். அவர்களுக்கான சில நல்ல திட்டங்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் திட்டங்கள் போன்றவற்றில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான அழுத்தங்களை நாமும் கொடுக்கின்றோம் இந்த துறைகள் வீழ்ச்சி அடைந்தால் அது மக்களுக்கு பெரும் பாதிப்பாக அமையும்  என தெரிவித்துள்ளார்.

தென்னிலங்கையில் மாயமான யுவதி: தாயிற்கு வந்த தொலைபேசி அழைப்பு

தென்னிலங்கையில் மாயமான யுவதி: தாயிற்கு வந்த தொலைபேசி அழைப்பு


மரண அறிவித்தல்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US