அரசிடம் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல் கிடையாது: ஹரிணி விளக்கம்
அரசாங்கம் குறுகிய கால, தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல் அல்லது தனிப்பட்ட தேவைகளுக்காக செயல்படாது என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு வரவு செலவுத்திட்டம் நாட்டின் அனைத்து துறைகளையும் உள்ளடக்கியுள்ளது.
2026 ஆம் ஆண்டுக்காக சமர்ப்பிக்கப்பட்ட ஒதுக்கீட்டு மசோதா குறித்து தனது கருத்துக்களை தெரிவிக்கும்போது நாடாளுமன்றத்தில் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது தொடர்ந்து பேசிய பிரதமர்,

பிளவு கோட்டை தள்ளி வைக்கவும்
ஜனாதிபதியின் ஒதுக்கீட்டு மசோதா உரையை அரசுக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையிலான பிளவு கோட்டை ஒதுக்கி வைத்துவிட்டு கவனமாகக் கேட்டிருந்தால், அந்த உரையிலிருந்தும் நாம் அனைவரும் கற்றுக்கொள்ள பல விடயங்கள் இருந்திருக்கும்.
அந்த முன்மொழிவுகள் மற்றும் புள்ளிவிபரங்கள் அனைத்திற்கும் பின்னால் மிக முக்கியமான கதை உள்ளது, அதே போல் அதன் உள்ளடக்கத்திலும் முக்கியமான கதை உள்ளது. அந்த கதையை அனைவரும் நன்றாக புரிந்துகொள்ள முயற்சிக்குமாறு நான் பரிந்துரைக்கிறேன்.
கொள்கைகள் மற்றும் சட்டங்களை வகுப்பது மட்டுமல்லாமல், சட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படும் போதும், ஒரு நாடு எவ்வாறு வளர்ச்சியடைய முடியும் என்பது பற்றிய ஒரு நல்ல கதை பட்ஜெட் உரையிலும் பட்ஜெட்டிலும் இருந்தது. இந்த நேரத்தில் அதுதான் முக்கியம் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
மீண்டும் சன் டிவி சீரியலில் என்ட்ரி கொடுத்த பாண்டவர் இல்லம் சீரியல் வேதநாயகி... எந்த தொடர்? Cineulagam
நடிகர் நெப்போலியன் வீட்டில் விசேஷம்! மகன் தனுஷ் - அக்ஷயா தம்பதிக்கு குவியும் வாழ்த்துக்கள் Manithan