புதிய வரியால் பாதிப்படைய போகும் வாடிக்கையாளர்கள்
பெறுமதி சேர் வரி செலுத்தும் வருவாயின் எல்லையை 2026 ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் குறைத்துள்ளதால் மறைமுகமாக பொருட்கள் சேவைகளின் விலை அதிகரிக்க கூடுமென பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
2026 ஆம் ஆண்டுக்கான பாதீட்டு உரையில் ஜனாதிபதி வரி தொடர்பான தொழில்நுட்ப சொற்களை பயன்படுத்தாததால் வரி அறவீடு தொடர்பில் முழு உரையையும் கேட்பதன் ஊடாகவே அறிந்து கொள்ள முடியும்.
குறைக்கப்பட்ட வருடாந்த புரள்வு
ஆனால் வரி அறவீட்டின் போது ஏற்படும் பாதக நிலைமைகள் கண்ணுக்கு தென்படாத தன்மையை ஏற்படுத்தியுள்ளது. அது தொடர்பில் விளக்கமளித்துள்ள நிபுணர்கள்,
வர்த்தக நடவடிக்கையின் போது VAT 18 % -SSCL 2.5 % பதிவு செய்வதற்கான வருடாந்த புரள்வு எல்லை ரூபா. 60 மில்லியனிலிருந்து ரூபா. 36 மில்லியன் வரை குறைக்கப்பட்டுள்ளது.
அதாவது ஒரு வருடத்திற்கு 60 மில்லியன் ரூபா விற்பனை செயற்பாடுகள் இருந்தால் அதாவது ஒரு நாளைக்கு 160,000 ரூபா புரள்வு இருந்தாலே வரி பதிவு செய்ய வேண்டும். அது இப்போது 36 மில்லியன் குறைக்கப்பட்டுள்ளதால் ஒரு நாளைக்கு 100,000 ரூபா புரள்வு இருந்தால் VAT 18 % -SSCL 2.5 % பதிவு செய்ய வேண்டும்.
அதனால் வரி பதிவாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும். இதற்கு முன்னர் வற் வரி மற்றும் SSCL பதிவு இல்லாமல் வர்த்தகம் செய்தவர்களும் இப்போது பதிவுக்கு உள்வாங்கப்படுவார்கள்.
குறைந்த செலவில் பொருட்களை வழங்கியவர்களும் வரி செலுத்தும் வகுதிக்குள் உள்வாங்கப்படுவதால் பொருட்களின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
வரி செலுத்துவோர் அதிகரிப்பு
உதாரணத்திற்கு சூப்பர் மார்க்கட் ஒன்றில் ஏனைய வர்த்தக நிலையங்களை விட குறைந்த விலையில் பொருட்களை வழங்கி வந்திருக்க கூடும்.அதாவது ஒரு நாளைக்கு 100,000 ரூபா புரள்வு இருந்ததாலும் VAT -SSCL செலுத்தாததால் குறைந்த விலையில் விற்பனை செய்திருக்க கூடும்.
ஆனால் இப்போது ஒரு நாளைக்கான புரள்வு குறைக்கப்பட்டுள்ளதாலும் வரி செலுத்தும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதால் குறைந்த விலையில் பொருட்களை வழங்க முடியாமல் போகலாம்.
நாம் அறியாத வகையில் சில வரிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.வரிகளை வர்த்தகர்கள் செலுத்தினாலும் அவர்கள் அதை வாடிக்கையாளர்களிடமிருந்து அறவிட்டுக் கொள்கின்றனர்.
அந்த வரிக்கான புரள்வு குறைக்கப்பட்டமை உள்ளுர் உற்பத்தி பொருட்களின் விலைகளில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்ததாலும்.அதாவது சிறு மற்றும் நடுத்தர வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் பாதிக்கப்பட கூடும்.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
க்ரிஷுடன் அமர்ந்து ரோஹினி திதி கொடுப்பதை நேரில் பார்த்த மீனா, அடுத்த நொடியே செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
நடிகர் நெப்போலியன் வீட்டில் விசேஷம்! மகன் தனுஷ் - அக்ஷயா தம்பதிக்கு குவியும் வாழ்த்துக்கள் Manithan
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam
மீண்டும் சன் டிவி சீரியலில் என்ட்ரி கொடுத்த பாண்டவர் இல்லம் சீரியல் வேதநாயகி... எந்த தொடர்? Cineulagam