தனியார் துறை ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி: சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல்
தனியார் துறை ஊழியர்களின் ஆகக்குறைந்த அடிப்படை சம்பளத்தை அதிகரிப்பதற்கான முறைமை தயாரிக்கப்படும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அத்துடன், அதற்குரிய பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நிதி கட்டுப்பாடு நடவடிக்கைகள்
இது தொடர்பில் அவர் தொடர்ந்து கருத்து வெளியிடுகையில், அரசாங்கம் என்ற வகையில் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நாம் முன்வைத்திருப்பது, நாடு மிகை பணவீக்கமாக மாறுவதைத் தடுப்பதை முதன்மை நோக்கமாகக் கொண்டே என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்த இலக்கை அடைய கடுமையான நிதி கட்டுப்பாடு நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டன.
இந்த முயற்சியின் விளைவாக, செப்டம்பர் 2023க்குள் பணவீக்கத்தை 0.80% ஆகக் குறைத்துள்ளோம் மனுஷ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையிலேயே, தனியார் துறை ஊழியர்களின் ஆகக்குறைந்த அடிப்படை சம்பளத்தை அதிகரிப்பதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  | 
    
    
    
    
    
    
    
    
    
    Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan
    
    ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri