மன்னாரில் 16 கட்சிகளும் 3 சுயேட்சைக் குழுக்களும் கட்டுப்பணம் செலுத்தின (Photos)
16 கட்சிகளும், 3 சுயேட்சைக் குழுக்களும் வன்னி தேர்தல் தொகுதியில், மன்னார் மாவட்டத்திற்கான கட்டுப்பணத்தை மன்னார் தேர்தல் அலுவலகத்தில் செலுத்தியுள்ளன.
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும்
நடவடிக்கை நிறைவடையும் நிலையில் இன்று (20.01.2023) இந்த கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி ஆகியவை இணைந்து மன்னார் மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுகின்றன.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தலைமையில் இன்று மன்னார் மாவட்டத்தில் உள்ள 5 உள்ளூராட்சி மன்றங்களுக்குமான கட்டுப்பணத்தை செலுத்தப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி
இதேவேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி மன்னார் மாவட்டத்தில் உள்ள 5 உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணத்தை இன்று (20.01.2023) செலுத்தியுள்ளது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹீனைஸ் பாரூக் தலைமையில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை, ஈ.பி.டி.பி கட்சியானது மன்னார் மாவட்டத்தில் 2 உள்ளூராட்சி மன்றங்களுக்கு தமது கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளது.
5 உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணம்
மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகர சபை, மன்னார், நானாட்டான், முசலி, மாந்தை மேற்கு ஆகிய பிரதேச சபைகள் உள்ளடங்களாக 5 உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.
மன்னார் நகரசபைக்கு 10 கட்சிகளும்,1 சுயேட்சைக் குழுவும் உள்ளடங்களாக 11 பேரும், மன்னார் பிரதேச சபைக்கு 8 கட்சிகளும் 1 சுயேட்சைக்குழுவும் உள்ளடங்களாக 9 பேரும், நானாட்டான் பிரதேச சபைக்கு 12 கட்சிகளும், மாந்தை மேற்கு பிரதேச சபைக்கு 9 கட்சிகளும், முசலி பிரதேச சபைக்கு 12 கட்சிகளும் 1 சுயேட்சைக்குழுவும் உள்ளடங்களாக 13 பேர் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.
மன்னார் மாவட்டத்தில் உள்ள 5 உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிட 16 கட்சிகளும் 3 சுயேட்சைக் குழுக்களும் தமது கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

இப்படி தான் சமந்தாவின் வாழ்க்கை இருக்கும்..கச்சிதமாய் கணித்த Aaliiyah!என்ன சொல்லிருக்கிறார் தெரியுமா? Manithan

2023ல் முதல் இடத்தை பிடித்த அஜித்தின் துணிவு- என்ன விவரம் தெரியுமா, கொண்டாட்டத்தில் ரசிகர்கள் Cineulagam

ராதிகாவிற்கு சீரியலில் இப்படியொரு டுவிஸ்டா? குழப்பத்தில் நிற்கும் கோபி.. இனி என்ன செய்ய போகிறார் தெரியுமா? Manithan

திருமணமான 8 மாதத்தில் புதுமணப்பெண் மரணம்! சிக்கிய கணவன், மாமியார்..அம்பலமான அதிர்ச்சி உண்மை News Lankasri

இளவரசர் பிலிப்புடைய சவப்பெட்டியை சுமந்த இராணுவ அதிகாரிக்கு நிகழ்ந்த பரிதாபம்: ஒரு துயரச் செய்தி News Lankasri
