2025ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட அறிக்கைக்கு சபாநாயகர் அங்கீகாரம்
நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட 2025 ஆம் ஆண்டிற்கான, வரவு செலவுத் திட்ட சட்டமூலத்திற்கு அரசியலமைப்பின் 79ஆவது பிரிவின் கீழ் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன இன்று (21) தனது அங்கீகாரத்தை வழங்கியுள்ளார்.
இதன்படி, 2025ஆம் ஆண்டு 3ஆம் இலக்க நிதி ஒதுக்கீட்டுச் சட்டமாக இது அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வருகிறது.
2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு அல்லது பாதீட்டு உரையை (Budget Speech) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நிதி அமைச்சர் பதவியில் இருந்து கடந்த பெப்ரவரி 17ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பித்தார்.
மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம்
அதனைத் தொடர்ந்து பெப்ரவரி 18 முதல் 25 வரை 7 நாட்கள் இந்த வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நடைபெற்றது.
பெப்ரவரி 25ஆம் திகதி நடைபெற்ற வாக்களிப்பில் 109 வாக்குகள் அதிகமாகப் பெற்று இந்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது.
பின்னர், பெப்ரவரி 27 முதல் இன்று (21) வரை 19 நாட்களுக்கு வரவு செலவுத் திட்ட மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் நடைபெற்றது.
114 மேலதிக வாக்குகள்
இன்று மாலை 7.40 மணிக்கு மூன்றாம் வாசிப்பு மீதான வாக்களிப்பு ஆரம்பமானது.
இதில் வரவு செலவுத் திட்ட மூன்றாம் வாசிப்பிற்கு ஆதரவாக 159 வாக்குகளும், எதிராக 45 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
இதன்படி, 114 மேலதிக வாக்குகளுடன் 2025 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட யோசனை இன்று நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |